வாரிசு படத்தை தொடர்ந்து, விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இவர், 2-வது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா விஜய்யுடன் நடிக்க இருப்பதால், படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் காஷ்மீரில் நடந்து வரும் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட த்ரிஷா, சில தினங்களிலே சென்னை திரும்பியுள்ளார். இதனால் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் பரவி வந்தன.
தற்போது இதுகுறித்து பேசிய த்ரிஷாவின் தாயார் உஷா, சமூக வலைதளங்களில் வரும் செய்திகள அனைத்தும் பொய், உண்மையில்லை எனக்கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.