மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகானுக்கு பதிலளித்த த்ரிஷா..!

த்ரிஷா குறித்து மன்சூா் அலிகான் பேசிய வீடியோ சர்ச்சையை கிளப்பிய நிலையில், இன்று அதற்கு மன்னிப்பு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் மன்சூர் அலிகான். அதாவது அந்த அறிக்கையில், “எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு’’ என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நடிகை த்ரிஷா, தனது சமூகவலைத்தள பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டார். அதில் To err is human, to forgive is divine (தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ குணம்) என்று பதிவிட்டிருந்தார்.

நடிகை த்ரிஷாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News