மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். வரும் ஜூன் 5-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் பாடல், நேற்று ரிலீஸ் ஆனது. இதனையொட்டி, செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துக் கொண்ட நடிகை த்ரிஷாவிடம், திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், அது நடந்தாலும் பரவாயில்லை. நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை எனவும் அவர் கூறினார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.