விஜயின் பிறந்த நாள் அன்று, நடிகை த்ரிஷா அவருக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தார். மேலும், விஜயுடன் லிஃப்டில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பாடகி சுசித்ரா, விஜய் த்ரிஷாவுடன் ஊர் சுற்றக் கூடாது என்றும், அவரது மனைவி சங்கீதாவுடன், நேரத்தை செலவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நடிகை த்ரிஷா, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆங்கில மொழி Quote ஒன்றை பதிவிட்டுள்ளார்.
உங்களை பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற சுமையை, நீங்கள் தூக்கி செல்வதை நிறுத்த வேண்டும் என்பது தான், அந்த Quote-ன் அர்த்தம் ஆகும். எனவே, இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், சுசித்ராவுக்கு தான், த்ரிஷா பதிலடி கொடுத்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.