த்ரிஷாவின் காதலரை காதலிக்கும் பிரபல நடிகை?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. 40 வயதாகியும் திருமணம் செய்யாமல் உள்ள இவருக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு, வருண் மணியன் என்பவருடன் திருமணம் நடக்க இருந்தது.

ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், த்ரிஷாவின் முன்னாள் காதலர் வருண் மணியனுடன், வேறொரு நடிகை டேட்டிங் செய்துள்ளதாக, வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதாவது, நியுசென்ஸ் என்ற தெலுங்கு வெப் தொடரில், நடிகை பிந்து மாதவி நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில், வருண் மணியன் உடன், டேட்டிங் செய்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிந்து மாதவி, ஆம், நான் டேட்டிங் செய்தது உண்மை தான் என்று பதில் அளித்தார். மேலும், த்ரிஷாவை விட்டு அவர் பிரிந்த பிறகு தான் டேட்டிங் செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News