நடிகை சிம்ரன் நடித்த ஜோடி படத்தில், துணை நடிகையாக தனது பயணத்தை தொடங்கியவர் த்ரிஷா. இந்த படத்திற்கு பிறகு, சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம், முக்கிய வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு, பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த த்ரிஷா, இன்று வரை முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார்.
இந்நிலையில், திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் இருந்த த்ரிஷாவின் புகைப்படம், தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது, நடிப்பதற்கு முன், மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த த்ரிஷா, மிஸ் சென்னை என்ற பட்டத்தை பெற்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.