கிறிஸ்துவ மத நம்பிக்கையை தொடர உதவிய இந்து மனைவி.. JD வேன்ஸ் பேட்டி..

குடியரசுக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர் செனட்டர் JD வேன்ஸ். இவர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட உஷா சில்லுக்குரி என்ற பெண்ணை, கடந்த 2014-ஆம் ஆண்டு அன்று திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த தம்பதிக்கு, எவான், விவேக், மிரபல் என்ற 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வேன்ஸ்-ம், உஷாவும், தற்போது Fox News சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அப்போது பேசிய வேன்ஸ், “உஷா கிறிஸ்துவ மதத்தை சேராதவராக வளர்க்கப்பட்டவர்.

ஆனால், நான் என்னுடைய கிறிஸ்துவ நம்பிக்கையில் மீண்டும் ஈடுபட ஆரம்பிக்கும்போது, உஷா மிகவும் ஆதரவாக இருந்தார்” என்று கூறினார்.

மேலும், தனிப்பட்ட வாழ்க்கையும், ஆன்மீக வாழ்க்கையும் சரியாக வடிவமைக்கப்பட்டதற்கு தன்னுடைய மனைவிக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News