கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷிய கடற்பரப்பில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது. அதன் தாக்கத்தால் பல்வேறு நாடுகளின் கடலோரப் பகுதிகளை சுனாமி என்னும் ஆழிப்பேரலை அழித்துச் சென்றது.
தமிழகத்தில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையோர கிராமங்களில் சுனாமியால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதில், அதிகம் பாதிக்கப்பட்டது மீனவர்களும் மீனவ கிராமங்களும்தான்.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை புரட்டிப்போட்ட சுனாமி பேரலை இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவு பெற்றது இந்த சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சுனாமி பேரலையால் இறந்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.