பைக்கில் வேகமாக சென்றபோது விபத்து : டிடிஎஃப் வாசனுக்கு கை எலும்பு முறிந்தது..!!

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் பைக்கில் வேகமாக சென்றபோது விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார்.

நேற்று தன் பைக்கில் சென்னையில் இருந்து மகாராஷ்டிராவுக்கு கிளம்பியுள்ளார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தை அடுத்து இருக்கும் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் வீலிங் செய்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் டிடிஎஃப் வாசன் தூக்கி வீசப்பட்டுள்ளார்.அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

சாலையோரம் கிடந்த வாசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டியது, கவனக்குறைவாக செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News