சினிமா
டிடிஎஃப் வாசனின் புதிய அவதாரம்! இந்த அவதாரமாவது நல்ல இருக்குமா?
டிடிஎஃப் என்ற Youtube சேனலில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் வாசன். இவர், தனது சப்ஸ்கிரைபர்களை சந்திப்பதற்காக, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால், அப்போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், பொறுமையை இழந்த டிடிஎப் வாசன், பல்வேறு Youtube சேனல்களுக்கு பேட்டி அளித்து, திமிராக பேசி வந்தார்.
இதுமட்டுமின்றி, நம்பர் பிளேட் இல்லாத காரில் நீதிமன்றத்திற்கு சென்றது, சிவப்பு நிற கோர்ட் அணிந்து மிரட்டல் தொனியில் வீடியோ வெளியிட்டது என்று பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கி வந்தார். இந்நிலையில், டிடிஎப் வாசன் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, செல்-அம் என்பவரது இயக்கத்தில் உருவாகி வரும் மஞ்சள் வீரன் என்ற படத்தில், இவர் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் போஸ்டர், டிடிஎப்பின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரிலும், பைக்கை வேகமாக ஓட்டுவது போலவும், கையில் சூளத்தை வைத்துக் கொண்டும், ஆக்ரோஷமாக அவர் காட்சி அளிக்கிறார்.
Youtube வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டி, இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்ற இவர், தற்போது சினிமா என்ற மாஸ் மீடியா மூலமும், அதனை செய்ய உள்ளார் என்பது, இந்த போஸ்டர் மூலம் தெளிவாகிறது. இதனை அறிந்த நெட்டிசன்கள் பலர், இந்த போஸ்டரையும், டிடிஎப் வாசனையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login