அமைச்சர் ஆதரவாளருடன் நெருங்கிய நட்பு கொண்ட TTF வாசன்?

Youtube Channel-கள் மூலமாக சிலர் பிரபலமாக வளர்ந்து வருவதும், பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவதும், அடிக்கடி நடந்து வருகிறது. இந்த லிஸ்டில், தற்போது TTF வாசன் என்ற Youtuber-ம் இணைந்துள்ளார். அதாவது, சமீபத்தில் ஜி.பி.முத்துவுடன் ரைட் சென்ற இவர், 150கி.மீ வேகத்தில் பைக்கை இயக்கியதால், பெரும் சர்சைக்கு ஆளானார்.

இதனால், கைது செய்யப்பட்டு, சிறைக்கு செல்லப்பட்ட டிடிஎஃப் வாசன், ஜாமீனில் இருந்து வெளியே வந்தார். வெளியே வந்த சில நாட்களிலேயே மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்ட வாசன், செய்தி நிறுவனங்களை கடுமையாக விமர்சித்திருந்தார். Youtuber-கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் கருத்து கூறியிருந்தார்.

இவரது இந்த புதிய வீடியோவும், பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளரும், உதயநிதியின் நற்பணி மன்ற மாவட்ட துணை தலைவருமான CK அருண், டிடிஎஃப் வாசனின் நெருக்கமானவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டிடிஎஃப் வாசன் ஜாமீன் பெற வரும்போது எடுக்கப்பட்ட வீடியோவில், சி.கே.அருணும் இருக்கிறார். இதனால், இவர்கள் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு பெரிய இடத்து பழக்கம் இருப்பதால் தான் வாசன், இந்த ஆட்டம் போடுகிறாரா என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனை இன்னும் ஊர்ஜிதப்படுத்தும் வகையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றிலும், எங்களை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது என்றும், எங்க பவர் தெரியாமல் இருக்கீங்க என்றும் தெரிவித்துள்ளது, சந்தேகத்தை அதிகரித்துள்ளது.