அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளை ஒட்டி கோவிலில் 1008 விளக்கு பூஜை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளை ஒட்டி நலமுடன் வாழ கோவிலில் 1008 விளக்கு பூஜை நடத்தப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொது செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாநகரத்தில் மையம் கொண்டுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதி ஈஸ்வரர் ஆலயத்தில் மாநில இளம்பெண்கள் பாசறை பொருளாளர் பவானி துரைப்பாண்டியன் கோவிலின் உட்பிரகாரத்தில் அங்க பிரதட்சணம் செய்தார். அதனைத் தொடர்ந்து 68 நாயன்மார்களுக்கு 1008 அகல் விளக்குகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் நலமுடன் நீடூடி வாழ கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பிஎஸ்என் தங்கவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.