தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு புதியது என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். ஜெயலலிதாவை பற்றி அறியாமல் பேசுகிறார். பிரதமர் மோடி வாஜ்பாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அன்புடனும் நட்புடனும் இருந்தவர்கள்.
1998 வது தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து பாஜக காலூன்ற வாய்ப்பு கொடுத்தது ஜெயலலிதா தான். இதெல்லாம் தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா. அவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏராளமான சாதனைகள் செய்துள்ளார்.
அந்த சாதனைகளை பொறுக்க முடியாமல் தான் சிலர் காழ்புணர்ச்சியில் அவர் மீது வழக்கு தொடுத்தனர். அவரது மரணம் வரை அவரை யாராலும் வெல்ல முடியவில்லை. 30 ஆண்டுகாலம் தமிழகத்தின் ஆளுமையாக இருந்தார். அவரைப்பற்றி அறியாமையில் பேசி வருகிறார் என கூறியுள்ளார்.