கடந்த 6 ம் தேதி துருக்கி, சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பல நாட்களாக நடைபெற்ற மீட்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கம் தொடர்பாக துருக்கி அரசு பல்வேறு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உறுதியற்ற, சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியதாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் உள்பட 171 மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 171 பேரும் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.