நிலநடுக்கம் வரப்போகுது… அன்றே கணித்த விஞ்ஞானி.!

நேற்று அதிகாலையில் துருக்கி, சிரியா எல்லையில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதிகாலை நேரம் தொடங்கி மாலை வரை 7.8, 7.4, 7.5 என அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிராங்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பிப்ரவரி 3 ஆம் தேதி மாலை 5.33 மணிக்கு பதிவொன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் “துருக்கியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்றும் பிப்ரவரி 4 முதல் 6ஆம் தேதிக்குள் 6 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்க பாதிப்புகள் உண்டாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

அவர் கணித்தது போலவே பிப்ரவரி 6ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் இத்துடன் நிற்காது. அடுத்தடுத்து பாதிப்புகள் உண்டாகும் என அவர் எச்சரித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

RELATED ARTICLES

Recent News