திருச்செந்தூரை சேர்ந்த இசக்கி என்பவர் பாஜக தகவல் தொழில்நுட்பம் பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர் ட்விட்டரில் கட்டெறும்பு என்ற பெயரில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு வருவது இவருடைய வழக்கம்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளி யுவராஜ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாதி மோதலையும், வன்முறையையும் தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் கட்டெறும்பு என்ற இசக்கி பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து இசக்கி மீது ஶ்ரீவைகுண்டம் போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பாஜக பிரமுகர் கட்டெறும்பு என்ற இசக்கி ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
15 நாட்களுக்கு தினமும் ஶ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளின் பேரில் கட்டெறும்பு என்ற இசக்கி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகவும், 10 நாட்களுக்கு முன்பு தனக்கு விதை வீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் தன்னை மன்னித்து விடுமாறு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.