Connect with us

Raj News Tamil

அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த 2 சீரியல் நடிகைகள்!

சினிமா

அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த 2 சீரியல் நடிகைகள்!

இந்தி மொழிகளில் உருவாகி வரும் பல்வேறு முன்னணி சீரியல்களில் நடித்து வருபவர் அமன்தீப் சோஹி.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் காலமாகியிருந்தார்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே, அமன்தீப்பின் சகோதரியும், பிரபல இந்தி சீரியல் நடிகையுமான டோலி சோஹி, உயிரிழந்துள்ளார்.

அதாவது, கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு அடுத்தடுத்த நாட்களில், இரண்டு பேரும் உயிரிழந்துள்ள சம்பவம், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

More in சினிமா

To Top