அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், வேறு சில விஷயங்களை வலியுறுத்தியும், நடிகர் விஜய் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய் எழுதிய கடிதத்தை, தொண்டர்கள் மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகம் செய்தனர்.
இதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், தொண்டர்களை கைது செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தொண்டர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது, அவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.