நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கியதை தொடர்ந்து அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை புத்துணர்ச்சியுடன் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மே – 28 உலக பட்டினி தினம் முன்னிட்டு பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவரும், நடிகருமான தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்குட்பட்ட சாலை தெரு பகுதியில் 250க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் மதன்குமார், வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய தலைவர் எஸ்.சார்லஸ் என்கின்ற ஆல்பர்ட், மாநகர நிர்வாகிகள் மொய்தீன், பிரபு, பகுதி கழக நிர்வாகிகள் மதன்,அபூபக்கர், திருநாவுக்கரசு,செல்வம் சூர்யா,காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய நிர்வாகி வெற்றிவேல், வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சரத்,அஜித்ராஜேஷ், ரமேஷ்,தீபக், செல்வம்,செந்தில் மற்றும் ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.