தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர், கடந்த ஆண்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கியிருந்தார். மேலும், அக்டோபர் மாதம், கட்சியின் கொள்கைகளை தெரிவிப்பதற்கு, பிரம்மாண்டமான முறையில், முதல் மாநாட்டை நடத்தியிருந்தார்.
இது, அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில், இந்த கட்சி தொடங்கி, இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, இன்று கட்சியின் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், தளபதி விஜய் கலந்துக் கொண்டு, தொண்டர்களிடம் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பாசிசமும், பாயாசமும், அதான் நமது அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் பேசி வைத்துக் கொண்டு மாற்றிமாற்றி சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான், நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறியது குறித்து விமர்சித்த விஜய், எல்.கே.ஜி பசங்க சண்டைப் போட்டுக் கொள்வது போல் நடந்துக் கொள்கிறார்கள் என்று கூறினார்.
தொடர்ந்து, மக்களுக்கு ரொம்ப பிடித்த ஒருவர் அரசியலுக்கு வந்தால் நல்லவர்கள் வரவேற்பார்கள். நாம் அரசியலுக்கு வந்தது ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படுத்தத்தான் செய்துள்ளது என்றும் கூறினார்.
மேலும், முன்பு பண்ணையார்கள் பதவியில் இருப்பார்கள். இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள் என்று விமர்சித்தார். நமது கட்சி பண்ணையார்களுக்கான கட்சி அல்ல. நமது கட்சி எளிய மக்களுக்கானது. நிர்வாகிகளும் எளிய குடும்பத்தினராகத்தான் இருப்பார்கள் என்று கூறினார்.