மார்ச் 20 க்குள் இதை செய்யாவிட்டால் உங்கள் ட்விட்டர் கணக்கு முடக்கப்படும்..!

உலகளவில் ட்விட்டர் முக்கிய சமூகவலைத்தளமாக இருந்து வருகிறது. இந்த ட்விட்டரை எலன் மஸ்க் வாங்கிவிட்டார். அதன் பிறகு அதன் முக்கிய பலவற்றை பயன்படுத்தவேண்டும் என்றால் மாத சந்தா Twitter Blue கணக்கிற்கு மாறவேண்டும் என்று அதிரடியாக அறிவித்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் எலன் மஸ்க் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இந்நிலையில் ட்விட்டர் பயனர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்து வந்துள்ளது. அதாவது Twitter Blue அல்லாதவர்கள் இனி 2 Factor Authentication வசதியை பயன்படுத்த முடியாது.

இந்த Two Factor Authentication ட்விட்டர் ப்ளூ பயனர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ட்விட்டர் ப்ளூ பயன்படுத்தவில்லை என்றால் உடனடியாக இந்த Text two factor authentication பாதுகாப்பை நீக்கவேண்டும். இதை நீங்கள் மார்ச் 20, 2023 க்குள் செய்யாவிட்டால் உங்களுடைய ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும்.

Twitter Blue நாம் பயன்டுத்தவேண்டும் என்றால் மாதம் 900 ரூபாய் செலுத்தவேண்டும். இதை செலுத்தினால் நமக்கு ப்ளூ டிக் கிடைக்கும்.

RELATED ARTICLES

Recent News