ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர், ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை அறிவித்தார். ஒவ்வொரு கணக்குக்கும் 8 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு கட்டணம் செலுத்தாதவர்களின் பக்கங்களில் ப்ளூ டிக் நீக்கப்படும் எனவும் ட்விட்டர் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் தற்போது சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் ப்ளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருடைய ட்விட்டர் பக்கத்திலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. சந்தா கட்டியவர்களின் கணக்குளின் ப்ளூ டிக்குகள் நீக்கப்படவில்லை.