ட்விட்டரில் இருந்து விலகும் எலன் மஸ்க்? அதிர்ச்சி தகவல்!

உலக பணக்காரர்களில் ஒருவராக இருந்த எலன் மஸ்க், நஷ்டத்தில் இருந்த ட்விட்டர் நிறுவனத்தை, சமீபத்தில் வாங்கியிருந்தார். ஆரம்பம் முதலே பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வந்த அவர், நீல நிற குறியீடு பெறுவதற்கு, கட்டணம் என்றெல்லாம் கூறி வந்தார்.

இதுமட்டுமின்றி, நீக்கப்பட்டிருந்த டெனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கையும், வாக்கெடுப்பு நடத்தி, மீண்டும் கொண்டு வந்தார். இவ்வாறு பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வந்த எலன் மஸ்க், ட்விட்டரின் தலைமை பணியில் நான் தொடராலாமா என்று தன்னை பற்றிய கருத்துக் கணிப்பு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதற்கு 57.6 சதவீதம் பேர் வேண்டாம் என்று வாக்களித்து எலன் மஸ்க்கிற்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பின் முடிவுகளை ஏற்று, பதவியில் இருந்து விலகுவாரா? அல்லது அதே பணியில் தொடர்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்..