திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள புது ராமகிருஷ்ணபுரத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர், பவானிநகர் காட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, இரண்டு மாணவிகள் ஒருவருக்கொருவர், ஆபாசமாக திட்டியும், தாக்கியும் கொண்டனர்.
எதற்காக இவர்கள் இருவரும் சண்டை போடுகிறார்கள் என்ற தெரியாமல் விழித்த பொதுமக்கள், மாணவிகளை தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்துள்ளனர். அதன்பிறகு, எதற்காக சண்டை போடுகிறீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு, “என் லவ்வர் உடன் இந்த பெண் பேசுகிறாள்.
அதற்காக தான் சண்டை பேட்டேன்” என்று மாணவி ஒருவர் கூறியுள்ளார். இதற்காக தான் சண்டை போட்டீர்களா என்று தலையில் அடித்துக் கொண்ட பொதுமக்கள், மாணவிகளை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து அறிந்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.