Connect with us

Raj News Tamil

அஜித்துடன் களமிறங்கும் இரு கதாநாயகிகள்! வைரலாக பரவும் தகவல்!

சினிமா

அஜித்துடன் களமிறங்கும் இரு கதாநாயகிகள்! வைரலாக பரவும் தகவல்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் வெளியீட்டு பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் திரிஷா மற்றும் தமன்னா இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, புனே, அபுதாபி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரு கதாநாயகிகளுடன் அஜித் நடிக்கவிருக்கும் ,இத்தகவலை ,அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top