கோவை கார் தற்கொலைப் படை தாக்குதல் வழக்கில் மேலும் இருவர் கைது

கோவை உக்கடம் GM நகர் பகுதியை சேர்ந்த சனாபர் அலி, இதயத்துல்லா ஆகியோரை இன்று காலை கைது செய்த NIA அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே 9 பேரை கைது செய்த போலிசார். அதில் 5 பேரை NIA அதிகாரிகள் காவலில் எடுத்து கோவையில் பல்வேறு இடங்களில் அழைத்து சென்று விசாரணை நடத்திய நிலையில், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மீண்டும் இருவரை கைது செய்துள்ளனர்.

2022 பிப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதிகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் குற்றவியல் சதித்திட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஏற்கனவே கைது செய்து சிறையில் உள்ள உமர் பாரூக் தலைமை தாங்கியதாகவும். ஜமேஷா முபீன், முகமது அசாருதீன், ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகியோர் பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிடவும், செயல்படுத்தவும் சதி செய்ததாகக் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.