கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ராமநத்தம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்னால் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கார்த்திக், சண்முகம் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காரில் இருந்த சதீஷ், செந்தில் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.