சேலத்தில் இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக,சேலம் மத்தியசிறை வார்டன்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறை காவலர்களின் இந்த காரியத்தால் காவல்துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சேலம் தென்அழகாபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர்,சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னை ஆபாச வீடியோ எடுத்து இரண்டு மத்தியசிறை வார்டன்கள் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வார்டன் அருண் மற்றும் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த வார்டன் சிவசங்கர் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் ஏற்கனவே ஓமலூர் பகுதியில் தனியார் பேருந்தில் இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு நடந்ததாக எழுந்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சேலம் பேருந்து நிலையத்தில் சென்று கொண்டிருந்தபோது இளம்பெண்ணுடன் இரண்டு வார்டன்களுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது செல்போன் எண்ணை வாங்கி இருவரும் இந்த இளம்பெண்ணிடம் பேசியுள்ளனர்.
இந்த நிலையில் சேலம் மத்தியசிறை காவலர்கள் குடியிருப்புக்கு அடிக்கடி இரண்டு வார்டன்களும் அந்த பெண்ணை அழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆபாச வீடியோ எடுத்து மிரட்டலில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இரண்டு வார்டன்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.