சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள வெள்ளரி வெள்ளி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென திரும்பியதால் பின்னல் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர் அப்போது மூதாட்டி ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டு உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.