சென்னை அம்பத்தூரில் மதுவிலக்கு காவல்துறையினர் 25 கிலோ கஞ்சா கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுவிலக்கு ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம்பத்தூர் ஓட்டி பேருந்து நிலையம் அருகே உதவி ஆய்வாளர் ஜெயந்தி மேற்பார்வையில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுத சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்கள் அம்பத்தூர் ஓட்டி பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகள் போல் இளைஞர்களை வரவழைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக இரண்டு இளைஞர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் (21) சாம்நாத் (20) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் வைத்திருந்த கைப்பையை கைப்பற்றி ஆய்வு செய்ததில் 25 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர்கள் மீது அம்பத்தூர் மதுவிலக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.