உதயநிதி படம் கிழிப்பு: வரவேற்பு கொடுப்பதில் இரு கோஷ்டியினரிடையே மோதல்!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நேற்று (ஏப்.11) மாலை திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூசை ஆதரித்து வாகன பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக அமைச்சர் உதயநிதி வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மெயின் பஜாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வேன்களில் பெண்கள் வரவழைக்கப்பட்டு வாகன பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்பு அங்கு அதிகளவில் பெண்களை கூட வைத்து கூட்டத்தை நாங்குநேரி திமுகவை சேர்ந்த பிரமுகர்கள் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது திசையன்விளையைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருக்கும் விஎஸ்ஆர் ஜெகதீஸ் உதயநிதி படம், முதல்வர் படம், வேட்பாளரின் படம் மற்றும் தனது படத்துடன் கூடிய பதாகை களை கொடுத்து சில நபர்களை உதயநிதி பேச வருகின்ற இடத்திற்கு பக்கத்தில் ஜெகதீஷ் ஆதரவாளர்கள் கொண்டு நிறுத்தி வைத்தனர்.

இதை கண்டு ஆத்திரம் அடைந்து நாங்குநேரி திமுகவினர் அவர்களிடம் இருந்த பதாகைகளை பிடிங்கி கிழித்து கைகளப்பிலும் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அவர்களை சமாதானப்படுத்தி பதாகை பிடுங்கி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

RELATED ARTICLES

Recent News