வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு , சிம்பு நடிப்பில் ரிலீஸாக இருக்கும் திரைப்படம் பத்து தல. சமீபத்தில் நடந்த இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பத்து தல படத்தின் கொண்டாட்டத்தை தடை போடும் வகையில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அதிரடி முடிவு எடுத்துள்ளதாம்.
அதாவது பத்து தல படத்தின் அதிகாலை காட்சிகளை ரத்து செய்து, காலை 8- மணி முதல் திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சிம்பு ரசிகர்களை மிகப்பெரிய ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் இதற்கான உண்மை காரணம், விடுதலை படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதிக்கியிருப்பது தான் என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.