அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம், வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம், ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த இரண்டு படங்களுக்கு பிறகு, அஜித் யாருடன் கூட்டணி வைக்க உள்ளார் என்பது, மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில், இந்த கேள்விக்கான பதில், தற்போது கிடைத்துள்ளது. அதாவது, அஜித் அடுத்ததாக, விஷ்னு வர்தன் இயக்கும் படத்தில் தான் நடிக்க உள்ளாராம்.
இந்த படத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி தான் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.