அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்..! அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்..!

திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக வேண்டும் என நீண்ட நாட்களாக திமுகவிற்குள்ளேயே கோரிக்கை எழுந்து வந்தது. அக்கட்சியின் எம்எல்ஏகள் முதல் அமைச்சர்கள் வரை அமைச்சராக பொறுப்பேற்பார் என பேட்டி அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நாளை மறுதினம் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதற்கான கடிதத்தை இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கேஆர்.பெரியகருப்பன், கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளது. தலைமை செயலகத்தின் 2-வது தளத்தில் உதயநிதிக்கான அறை தயாராகி வருகிறது. இதற்கான அதிகாரப்புர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.