ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதன்மூலம் பல்வேறு பிரம்மாண்ட படங்களை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். இதையடுத்து, சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர், தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார்.
ஏற்கனவே கால்ஷீட் கொடுக்கப்பட்ட திரைப்படங்களை மட்டும் முடித்துவிட்டு, அரசியலில் தீவிரமாக இயங்க உள்ளார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில், கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படம் வரும் 17-ஆம் தேதி ரிலிசாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடந்தது. அதில், இயக்குநர் மு.மாறன் பேசும்போது, நரகாசூரன் படத்தில் ஆத்மிகாவின் நடிப்பை பார்த்த பிறகு தான், இந்த படத்தில் நடிக்க வைத்தேன் என்று கூறியிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய உதயநிதி, அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவே இல்லையே.. அப்புறம் எப்படி படத்தை பாத்தீங்க என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மு.மாறன், டிரைலர் மட்டும் தான் சார் பார்த்தேன் என்று பதில் கூறினார். இதற்கு நக்கலாக ரிப்ளை செய்த உதயநிதி, நல்ல வேளை படம் பார்க்கலனா கூப்பிட்டிருக்க மாட்டீங்க என்று கூறினார். மைன்ட் வாய்ஸ் என்று நினைத்துக் கொண்டு அவர் சத்தமாக பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.