பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தனியார் பள்ளிகளில், இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது என்றும், அதனை ஆட்சியாளர்கள் தான் நடத்தி வருகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
மேலும், திமுக அரசு மொழியை வைத்து அரசியல் செய்கிறது என்றும், அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-
“என்னுடைய வீட்டில் சுவரொட்டி ஒட்டுவதாக அண்ணாமலை கூறியிருந்தார். முடிந்தால் வரச் சொல்லுங்கள். பாஜக தலைவருக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கமாவது வரச் சொல்லுங்கள். இது உதயநிதிக்கும், அண்ணாமலைக்குமான தனிப்பட்ட பிரச்சனை இல்லை. கல்வி நிதி தொடர்பானது.
நிதியை பெற்றுத்தர துப்பில்லாதவர்கள் சவால் விடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. தனியார் பள்ளியை நடத்துபவர்கள் சட்டவிரோதமாக நடத்துகிறார்களா என்ன? தனியார் பள்ளிகளை நடத்துபவர்கள் மத்திய அரசிடம், தகுந்த அனுமதி பெற்றே நடத்துகிறார்கள்.
தனியார் பள்ளியில் இலவச உணவு கொடுக்கிறார்களா? இலவச சீருடை கொடுக்கிறார்களா? மும்மொழிக் கொள்கை என்பது அரசுப் பள்ளியோடு தொடர்புடையது. உ.பி. கும்பமேளாவில் கூட்டத்தை கட்டுப்படுத்த தெரியாமல், பாஜக அரசு திணறுகிறது”
இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறினார்.