உதயநிதி அமைச்சரானதால் கமலுக்கு வந்த பிரச்சனை!

உதயநிதி ஸ்டாலின் தற்போது மாமன்னன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கு அடுத்ததாக, கமலின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக, அவரே கூறியிருந்தார்.

இந்நிலையில், எம்.எல்.ஏ-வாக இருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதன்காரணமாக, சினிமாவில் நடிப்பதில் இருந்து, அவர் முழுவதுமாக விலகியுள்ளார்.

இதனால், கமலின் படத்தில் அவர் நடிக்க முடியாத, சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்திற்கு, உதயநிதி தான் சரியாக இருப்பார் என்று கமல் நினைத்திருந்த நிலையில், தற்போது வேறொரு நடிகரை தேர்வு செய்ய வேண்டிய சூழல், தற்போது ஏற்பட்டுள்ளது.