முக்கிய பொறுப்பை மனைவிக்கு தந்த உதயநிதி?

தயாரிப்பாளராக பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், நடிகராக மாறி, தற்போது அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் அமைச்சராக பதவியேற்றுள்ள இவர், தீவிர அரசியல் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த பொறுப்பை தன்னுடைய மனைவிக்கு வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.