வாரிசு படத்தையும் வாங்கிய தளபதியின் ‘வாரிசு’!

துணிவு திரைப்படமும், வாரிசு திரைப்படமும், பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இதில், துணிவு படத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ்-ம், வாரிசு படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டியோவும், வெளியிட உள்ளனர்.

இந்நிலையில், வாரிசு படத்தையும், உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது, சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் மட்டும், உதயநிதி ஸ்டாலின், வாரிசு படத்தை வெளியிட உள்ளார்.

இதனால், இரண்டு படங்களுக்கும், சமமான திரையரங்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.