Trending
வாரிசு படத்தையும் வாங்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்!
துணிவு திரைப்படத்தை, உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதேபோன்று, வாரிசு படத்தையும், நீங்கள் வெளியிடுவீர்களா என்று சில நேர்காணல்களில், உதயநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை சூசகமாக கூறியிருந்தார். இதையடுத்து, வாரிசு படத்தின் வெளியீட்டு உரிமை, 7 ஸ்கீரின் நிறுவனத்திற்கு சென்றதாக, அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சில மாவட்டங்களில் மட்டும், வாரிசு படத்தை, ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், வாரிசு படத்தை, ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.
