விஜய்க்கும், உதயநிதிக்கும் இடையே இப்படியொரு பிரச்சனையா?

ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், பல்வேறு படங்களை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். இவர், விஜயை வைத்து குருவி என்ற படத்தையும், தயாரித்துள்ளார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், விஜய் குறித்து பேசியுள்ளார். அதில், விஜய் யாரிடமும் நெருக்கமாக பழக மாட்டார். அப்படி பழகிவிட்டால், மிகவும் நெருக்கமான நபராக மாறிவிடுவார்.

இப்படி இருக்கையில், விஜய்க்கும், எனக்கும், சில பிரச்சனை ஏற்பட்டது. என்னை பற்றி தவறாக, விஜயிடமும், விஜயை பற்றி தவறாக என்னிடமும், சிலர் கூறினர்.

பின்னர், இந்த பிரச்சனையை பேசி, நாங்களே சரி செய்துவிட்டோம் என்று உதயநிதி அந்த பேட்டியில் கூறியுள்ளார். உதயநிதி வெளிப்படையாகவே, இவ்வாறு பேசியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.