துணிவு திரைப்படத்தின் மாஸ் அப்டேட் சொன்ன உதயநிதி!

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு. வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும், படத்தில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், துணிவு திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை, உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

அதன்படி, வலிமை படத்தை போலவே, துணிவு திரைப்படத்திலும், பைக் ஸ்டண்ட் காட்சிகள் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள், கடும் உற்சாகம் அடைந்துள்ளனர்.