லவ் டுடே பார்த்துவிட்டு Phone கேட்ட மனைவி – ஷாக்கான முதல்வர்!

கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே. சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படம் குறித்து, உதயநிதி ஸ்டாலின் சுவாரசிய தகவல் ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது, இந்த படத்தை குடும்பத்துடன், உதயநிதி ஸ்டாலின் பார்த்துள்ளாராம்.

படம் பார்த்து முடித்த பிறகு, அவரது தாய் துர்கா ஸ்டாலின், இதேபோன்று நாமும் செல்போன்களை மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டுள்ளாராம். இதற்கு, நானும், அப்பாவும் பயங்கர ஷாக் ஆயிட்டோம் என்று உதயநிதி கலகலப்பாக பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.