”ரெட் ஜெயிண்ட்” பொறுப்பிலிருந்து விலகும் உதயநிதி..! அடுத்து யார் தெரியுமா..?

தமிழின் முன்னணி தயாரிப்பாளராக வருபவர் உதயநிதி ஸ்டாலின். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் என்ற பேரில் தயாரித்து வரும் இவர், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ-வான உதயநிதி, அண்மையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலன் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

அண்மையில் இதுகுறித்து பேசிய இவர், தீவிர அரசியலில் கவனம் செலுத்தவுள்ளதாகவும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் திரைப்படமே தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், இதற்கு பதிலாக மனைவி கிருத்திகா உதயநிதி பொறுப்பை ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.