தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் குறித்து பிரபல நாளிதழ் கடுமையாக விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். “கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்!” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் தளத்தில் #தினமலம் என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.