ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை.. அதிரடி தண்டனை..

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான வன்முறைகள் என்பது, காலங்காலமாக நடந்து வருகிறது. இதுவும் இயற்கையான உறவு முறை தான் என்று பல்வேறு அறிவியல் விளக்கங்கள் அளித்தபோதிலும், அது தவறு என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கும் வழக்கம், உலகம் முழுவதும் உள்ளது.

தற்போது இதுகுறித்து விழிப்புணர்வு அடைந்துள்ள சில நாடுகள், ஓரின சேர்க்கை திருமணங்களை சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளது. சமீபத்தில், இந்தியாவிலும் இந்த மாதிரியான திருமணங்கள் சட்டப்பூர்வ அனுமதியை பெற்றிருந்தது.

ஆனால், இன்னும் பொருளாதார ரீதியாகவும், கலாச்சாரம் ரீதியாகவும் வளராத நாடுகள், ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதை, சட்டவிரோதமாக பார்க்கின்றன.

அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மசோதா, நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தில், 389 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, ஓரின சேர்க்கையில் ஈடுவது, அதற்கு உறுதுணையாக இருப்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.