ஹமாஸ் குழுவினர் கடந்த 7-ஆம் தேதி நிலம், கடல், வான் வழியாக ஊடுருவிய இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களையும், ராணுவத்தினரையும் கொல்லப்பட்டன. 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துக் சென்றனர்.
ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் ராணுவம் கடந்த 18 நாள்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இது குறித்து ஐ.நா., பொதுச்செயலர் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசுகையில், காசா மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். காரணம் இல்லாமல் ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தவில்லை என்றார்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இலய் கோஹன் மற்றும் ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டான், பாலஸ்தீன மக்கள் மீதான 56 ஆண்டுகளாக அடைக்குமுறையே போருக்கு காரணம். இதனை நிறுத்த முயற்சிக்காத ஐ.நா., பொதுச்செயலர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இனி ஐ.நா.,தூதர்களுக்கு இஸ்ரேல் விசா வழங்காது. இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.