ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ், இந்தியா வருகை!

மூன்று நாள் பயணமாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ், இன்று இந்தியா வருகிறார்.
ஐ.நா. பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முதல் முறையாக அவர் இந்தியா வருகிறார்
.

3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், மும்பையில் தீவிரவாத தாக்குதலில் உயிரிந்தோருக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர், ஐ.ஐ.டி மும்பையில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அன்டோனியா குட்டரஸ், ஐ.நா-வில் இந்தியாவின் பங்கு குறித்து உரையாற்ற இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலம் கேவாடியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன் இணைந்து சுற்றுச்சூழலுக்கான கையேடு மற்றும் இலட்சினை ஆகியவற்றை வெளியிடுகிறார்.