Connect with us
Raj News Tamil

Raj News Tamil

வாகன நிறுத்த மேலாண்மைக் குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது: மேயர் பிரியா!

தமிழகம்

வாகன நிறுத்த மேலாண்மைக் குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது: மேயர் பிரியா!

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்த நடைமுறைகளைச் சிறப்பாக மேம்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் (நேற்று) வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மேயா் ஆா்.பிரியா கலந்து கொண்டு பேசியது:

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும், அனுமதி பெற்ற உரிமையாளரால் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய வாகன நிறுத்த ஒப்பந்தங்கள், 2023 அக்டோபா் மாதத்தில் முடிவடைகிறது.

இதைத் தொடா்ந்து, வாகன நிறுத்தத்தை மேற்கொள்ள மண்டலம் வாரியாக 3 தனித்தனி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்.

முதல்கட்டமாக பன்னடுக்கு வாகன நிறுத்தக் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சென்னை மாநகரில் திருவொற்றியூா் நகராட்சி வணிக வளாகக் கட்டடம், மருந்தகக் கட்டட வளாகம், புல்லா அவென்யூ-பழைய வளாகம், ஈ.வெ.ரா.சாலையிலுள்ள ஈகா திரையரங்கம் எதிரில் உள்ள வளாகம், ராஜா அண்ணாமலைபுரம் வளாகம், சி.பி. ராமசாமி சாலையில் உள்ள வளாகம், டாக்டா் நாயா் சாலை பழைய வளாகம், என்.எஸ்.கே. சாலை-கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், ஆற்காடு சாலை-வளசரவாக்கம் மண்டல அலுவலகம், அடையாறு மண்டலம்-இந்திரா நகா், 3-ஆவது அவென்யூ சாலையில் உள்ள வணிக வளாகம் ஆகிய 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கான சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு, அது வாகன நிறுத்த மேலாண்மைக் குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது. மேலும், வாகன நிறுத்தக் கொள்கையும் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார் அவா்.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல்ஆணையா் (வருவாய் (ம) நிதி) ஆா்.லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

More in தமிழகம்

To Top