பாஜக தலைமையிலான அரசு, பொது சிவில் சட்டம் என்ற புதிய சட்டத்தை, அமலுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், அனைத்து மதத்தினருக்கும், சிவில் தொடர்பான விவகாரங்களில், ஒரே மாதிரியான சட்டம் இருக்கும்.
சிவில் தொடர்பான விவகாரம் என்றால், திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை போன்றவை, இதன் கீழ் வரும். இந்த விவகாரங்களில், ஒவ்வொரு மதத்தினரும், வெவ்வேறு சட்டங்களை கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால், பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால், அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருக்கும்.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர கலந்து இருக்கும் நிலையில், தற்போது ஒருசில மாநிலங்களில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில், இன்று பொது சிவில் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், இந்த சட்டம் அங்கு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.